சொல்லதிகாரம் - இடையியல்52

யான்   ஒப்பில்   வழியாற்  பொருள்  செய்தன.  பிறவும்   இவ்வாறு
வருவன அறிந்து கொள்க.

நச்.

இதுவுமது.

இ-ள் : கொன்னைச் சொல் அச்சம் பயமிலி காலம் பெருமை என்று
அப்பால்   நான்கே- கொன்னச்  சொல் அச்சப் பொருள் பயமின்மைப்
பொருள்  காலப்  பொருள்  பெருமைப்  பொருள்  என்று  கூறப்பட்ட
அக்கூற்று நான்கேயாம், எ-று.

உ-ம் : ‘கொன்முனை  யிரவூர்  போல’ என அச்சமும், ‘கொன்னே
கழிந்தன்  றிளமையும்’  எனப் பயம் இன்மையும், ‘கொன் வரல் வாடை’
எனக்   காதலின்  நீங்கிய  காலமறிந்து வருதலையுடைய வாடை எனக்
காலமும், ‘கொன்னூர் துஞ்சினும்’ எனப் பெருமையும் உணர்த்திற்று.

கல்.

என்-எனின், இதுவும் அது.

இ-ள் ;  அச்சத்தின்  கண்ணும், பயனின்மைக்கண்ணும் காலத்தின்
கண்ணும்,    பெருமைக்   கண்ணும்   என  அக்  கூறு  நான்  காம்
கொன்னைச் சொல் எ-று.

உ-ம் ;  ‘கொன்முனை  யிறவூர்’   என்பது  அச்சம்.  ‘கொன்னே
வந்தான்’   என்பது  பயனின்மை.  ‘கொன்  வரல் வாடை நினதெனக்
கொண்டேனோ’  என்பது  காலம்,  ‘கொன்னூர்  துஞ்சினும்’  என்பது
பெருமை.

ஆதி.

1 உ-ம் : கொன்படை வீரர் - அச்சம்தரும்
கொன்னே கழிந்தது என் வாழ்நாள் - வீணாக
கொன் பொருள் வரவு பயன்பட்டது - காலத்தில் வந்தது.
கொன் நகர் - பெருநகர்.


1. உதாரணம்    செய்யுளிலிருந்து   காட்டலே  சிறந்தது  இடைச்
சொல்   பற்றித்   தொல்காப்பியர், தொல்காப்பிய  மொழியியல்
பக். 238.