சொல்லதிகாரம் - இடையியல்53

பி-கு.

“கொன்  என்ற  சொல்  ஒரு பெயருக்கோ வினைக்கோ அடையாய்
அமைந்திருக்க  அதனை   இடைச்சொல்  எனக்  கருதுவது  எவ்வாறு
பொருந்தும் எனத் தோன்றவில்லை” என்பர் குமாரசாமி ராஜா.

உம்
 

250.

எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை
முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென்
றப்பா லெட்டே யும்மைச் சொல்லே                (7)

(எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று
அ பால் எட்டே உம்மைச் சொல் ஏ)
 

ஆ. மொ;

இல.

The  morpheme  ‘um’  denotes  eight  senses  which are
incompletness,  greatness,  doubt, negativeness, completeness
enumeration, clearness and benifit.

ஆல்.

The  morpheme   /um/  goes  with  these  eight  implied
incompleteness.  greatness,   doubt,  negation,  completeness,
enumer  ation,  indication of known alternatives and becoming
somthing.

பி. இ. நூ.

நேமி. சொ 51

தெரிநிலை யாக்கம் சிறப்பு எச்சம் முற்று எண்
அரிதாம் எதிர்மறையே ஐயம் - தரும் உம்மை

நன் 425

எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கமொடு உம்மை எட்டே.

இல. வி. 256

எதிர்மறை சிறப்பு எண் எச்சம் முற்று ஐயம்
தெரிநிலை ஆக்கம் என எட்டு உம்மே.

தொன். 134

உம்மையே யெதிர்மறை எச்சம் முற்று அளவை
சிறப்பு ஐயம் ஆக்கம் தெளிவு என எட்டே.