முத்து. ஒ. 5. எதிர் மறை எச்சம் முற்று எண்ணே தெரிநிலை ஐயம் சிறப்பு ஆக்கமும் அளிக்கும் உம்மை. இளம். வ-று : சாத்தனும் வந்தான் என்றால் அவனை யன்றிப் 1 பிறரையும் வரவு விளக்கு மாகலின் அஃது எச்சவும்மை. “தேவரே தின்னினும் வேம்பு கைக்கும்” (நாலடி மெய்ம்மை. 2) என்பது சிறப்பு உம்மை. “குறவரும் மருளும் குன்றத்துப் படினே” (மலைபடு. 275) என்பதும் அது. ‘பத்தானும் எட்டானும்’ என்பது துணியாமை மேல் நின்றமையான் ஐயத்திண்கண் வந்தது. “கொற்றன் வருவதற்கும் உரியன்” என்பது வாராமையும் செப்பிநிற்கும் ஆகலின் எதிர்மறை யும்மையாயிற்று. ‘தமிழ் நாட்டு 2 மூவரும் வந்தார்.’ என்பது முற்றும்மை. ‘நிலனும் நீரும் தீயும் வளியும்’ என்பது எண்ணும்மை. ‘நன்றும் அன்று தீதும் அன்று, இடைநிகர்த்தாயிற்று’ என்பது தெரிநிலையும்மை, இடைநிகர்த்தாயினமை தெரிந்தொழிந்தனம், அவ்விரண்டும் அத்துணைத்து ஒழிய நின்றிலாமையின். 3 ‘நெடியனும் வலியனும்’ என்பது ஆயினான் என்னும் ஆக்கத்துக்கண் வந்தது ஆக்கவும்மை.
1. பிறரது வரவையும் விளக்கும் என்னும் பொருளது. 2. மூவரும் என்பது மூவேந்தரைக்குறித்தது. 3. ‘நெடியனும் வலியனும், ஆயினான்’ என்றிருப்பின் நன்று. |