சொல்லதிகாரம் - இடையியல்56

‘இருநிலம்  அடிதோய்தலிற்   றிருமகளுமல்லள்   அரமகளுமல்லள்
இவள்   யாராகும்’  என்ற  வழித்  தெரிதற்  பொருட்கண்  வருதலின்
தெரிநிலையும்மை.    திருமகளோ   அரமகளோ   என்னாது  அவரை
நீக்குதலின் ஐயவும்மையின் வேறாதல் அறிக.

ஆக்கவும்மை   வந்தவழிக்   கண்டு   கொள்க.    உரையாசிரியர்
‘நெடியனும்  வலியனும்  ஆயினான்’ என்புழி உம்மை ஆக்கம் குறித்து
நிற்றலின்    ஆக்கவும்மை    என்றார்.   “செப்பே   வழீ   இயினும்
வரைநிலையின்றே”   (கிளவி.   15)    என்னும்   உம்மை   வழுவை
இலக்கணமாக்கிக்கோடல்    குறித்து    நின்றமையின்   ஆக்கவும்மை
என்பாரும் உளர்.

தெய்;

இதுவுமது.

இ-ள் ;  எச்ச முதலாகச் சொல்லப்பட்ட  எண்வகைப்  பொருளும்
உணரவரும், உம்மைச் சொல், எ-று.

உ-ம் :  எச்சம்  இறந்தது  தழீஇயதும்,  எதிரது  தழீஇயதும்  என
இருவகைப்படும்.  சாத்தனும்  வந்தான்  என்ற  வழி  முன்  ஒருவனது
வரவு  குறித்தானாயின்  இறந்தது  தழீஇயதாம்.   பின்  ஒருவன் வரவு
குறித்தானாயின்  எதிரது  தழீ  இயதாம்.   ஏனை ஒழிந்த பொருளைக்
குறித்தமையின் எச்சமாயிற்று.

சிறப்பு  என்பது  மிகுதி,  அஃது  உயர்பால்  மிகுதலும்  இழிபால்
மிகுதலும்  என  இருவகைப்படும்.  1 ‘அக்காரம்  யாவரே  தின்னினும்
கையாதாம்  கைக்குமே,  தேவரே  யென்னினும்  வேம்பு’  (நாலடி. 112)
என்றவழி  ‘யாவர்’  என்றது  இழிபு குறித்து   நின்றது; தேவர் என்பது
உயர்பு குறித்து நின்றது.

ஐயம்  என்பது ஐயப்பட்ட பொருண்மை குறித்து வருவது, 2 ஏனல்
காவல் இவளுமல்லள், மான்வழி வருகுநன் இவனும்


1. பொருள் :  சர்க்கரையை   யாவர்  தின்றாலும்     கசக்காது;
வேப்பம்பழத்தைத் தேவரே தின்றாலும் கசக்கும்.

2. பொருள் :  “ இவளும்    தினைப்புனம்  காவல்  செய்பவள்
அல்லள்:    இவனும்   மான்  தப்பியோடிய  வழியைத்  தேடி
வருபவன்  அல்லன்;   நரந்தம்பூமாலை   யணிந்த  இவனுடன்
இவளுக்குக்  கரந்த உள்ளம், (உண்டு)”