சொல்லதிகாரம் - இடையியல்57

அல்லன்,  நரந்தங்கண்ணி  யிவனோ  டிவளிடை,  ‘கரந்தவுள்ள மொடு’
(குறுந். 54) என்றவழிக் காரணம் பிறிதாகல்  வேண்டும்  என்னும் ஐயம்
குறித்து நின்றது.

எதிர்மறையாவது    யாதானும்   ஒரு    தொழிலை   எதிர்மறுத்த
தொழிற்கண்   வரும்.    ‘சாத்தன்   வருதற்கும்  உரியன்’  என்றவழி
வாராமைக்கும் உரியன் எனவரும்.

முற்று   என்பது   மற்றொரு   பொருளை   நோக்காது   நிற்கும்.
‘தமிழ்நாட்டு  மூவேந்தரும் வந்தார்’ எனவரும். ‘முழுதும்  உணர்ந்தார்’
என்பதும் அது.

எண்   என்பது   பல   பொருளை   எண்ணிக்   குறித்து  வரும்
1 மண்டிணிந்த   நிலனும்,  நிலனேந்திய  விசும்பும்,  விசும்பு  தைவரு
வளியும், வளிதலைஇய தீயும், தீமுரணிய நீரும்’ (புறம்.2) எனவரும்.

தெரிநிலை  என்பது  ஒரு  பொருளை  ஐயப்படுதலும்  துணிதலும்
இன்றி    ஆராயும்    நிலைமைக்கண்   வருவது.   ஐதேய்ந்தன்று
பிறையுமன்று, மைதீர்ந்தன்று மதியுமன்று (கலி. 57) என வரும்.

ஆக்கம்   உம்மையடுத்த  சொற்பொருள்மேலாகும்  நிலைமையைக்
குறித்துவரும்  ‘வாழும் வாழ்வு’, ‘உண்ணும் ஊண்’ எனத்  தொழிலினது
ஆக்கம்   குறித்து   நின்றவாறு  கண்டு  கொள்க.  இது   பெயரெச்ச
வினைச்சொல்    அன்றோ   வெனின்   ஆம்.   அதன்கண்    உம்
இடைச்சொல்  என்க  அதனானேயன்றே  ‘உம்  உந்தாகும்   இடனுமா
ருண்டே’   (இடை.   42)   என்னும்  இலக்கணத்தான்,   ‘நெல்லரியும்
இருந்தொழுவர்’   (புறம்.24)   என்னும்   பாட்டினுள்,  ‘செஞ்ஞாயிற்று
வெயில்  முனையின்  தெண்கடல் திரைமிசைப் பாயும்  எனற் பாடலது
பாயுந்து  என  வந்தது.  இவ்விலக்கணம் வினையியலுள்  ஓதாமையால்
பெயரெச்ச  ‘உம்’ இடைச்சொல் என்று கொள்ளப்படும்.   ‘பாயும் புனல்
என்பது ‘பாய்புனல் எனத் தொக்குழி, வேற்றுமைப்  பொருட்கண் உருபு
பெயர் நிற்பத் தொக்கவாறு


1. பொருள் : மண்  செறிந்த    நிலமும்.  நிலத்தைத்  தாங்கிய
விசும்பும், விசும்பில்   சுழலும் காற்றும்,  காற்றை யுடன்கொண்ட
தீயும், தீயினுக்கு மாறுபட்ட நீரும்.

2. பொருள் : நச்.  உரைக்குறிப்புப்  பார்க்க,