போல வினை நிற்ப உருபு தொகுதலானும், செய்யும் என்பது வினையும் உருபுமாகிய இருநிலைமைத்து என்று கொள்க, செய்யும் என்னும் முற்றுச் சொல்லின்கண் ‘உம்’ எவ்வாறு வந்ததெனின், அது மற்றொரு பொருளைக் குறித்து நில்லாமையின் ஈண்டு இடமின்றென்க. முற்ற நிற்றலின் முற்றும்மை எனினும் இழுக்காது. ஆக்கவும்மை என்பதற்கு ‘நெடியனும் வலியனும் ஆயினான்’ என உதாரணம் காட்டுபவால் எனின், அஃது எண்ணும்மையென்க. தனிவரின் எச்சவும்மையாம். நச். இதுவுமது. இ-ள் : உம்மைச்சொல் எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று அப்பால் எட்டே-உம் என்னும் சொல் எச்சத்தைக் குறிப்பதும் சிறப்பைக் குறிப்பதும் ஐயத்தை குறிப்பதும் எண்ணைக் குறிப்பதும் தெரிநிலையைக்குறிப்பதும் ஆக்கத்தைக் குறிப்பதும் என அக்கூற்று எட்டாம், எ-று. எச்சம் இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இரு வகைத்து. சாத்தனும் வந்தான் என்னும் உம்மை கொற்றனும் வந்தான் என எதிரது தழீஇயற்று. பின் வந்த கொற்றனும் வந்தான் என்பதூஉம் முன் வந்த ‘சாத்தானும் வந்தான்’ என்பதனைத் தழுவுதலின் இறந்தது தழீஇயிற்று. இனி இவ்விரண்டினையும் எதிர்காலந் தழீஇயினவாக்கி ‘இன்று சாத்தனும் வரும், நாளைக் கொற்றனும் வரும்’ என்பன எதிரது தழீஇயின என்றுமாம், இன்னும் இவ்வெச்சத்தான் ‘யான் கருவூர்க்குச் செல்வல்’ என்றாற்கு, யானும் அவ்வூர்க்குப் போதுவல்’ என முழுவதூஉம் தழுவுவதும், அவ்வாறு கூறினாற்கு ‘யானும் உறையூர்க்குப் போதுவல்’ என ஒருபுடை தழுவுவதும் என இரு வகைத்தாம். சிறப்பு உயர்வு சிறப்பும் இழிவு சிறப்பும் என இருவகைத்து. 1 ”உப்பொடு நெய்பால் தயிர் காயம் பெய்திடினும், கைப்பறா
1. பொருள் : பேய்ச்சுரைக்காயானது உப்பு நெய் பால் தயிர் காயம் ஆகியவற்றைச் சேர்த்துச் சமைத்தாலும் தன் கசப்புச்சுவை அறாது. |