சொல்லதிகாரம் - இடையியல்13

முற்றுப்  பொருளில் வரும் உம்மை, சில சமயம் எச்சப்பொருளிலும்
வரும்.  ‘பத்தும்  கொடாதே’  என்றால், ‘முற்றும் கொடாதே’ என்றாம்;
அதுவே ‘முற்றும் கொடாதே சிலகொடு’ எனவும்

ஆம். எனவே முற்று எச்சமாக வந்ததாம். (37)

உம்மை  எண்ணும்மையாக வரும்போது தொகை பெற்றும் பெறாதும்
வரும்.  ‘முருகனும்   வேலனும்   கந்தனும்  ஆகிய  மூவரும்  வரும்’
என்றோ, ‘முருகன் வேலன் கந்தன் வருக’ என்றோ வரலாம். (39)

எண்ணுப்  பொருளில் வரும் போது வேற்றுமையுருபுகள் விரிந்தும்
தொக்கும்  வரலாம்.  ‘ஆடலையும்  பாடலையும்  வியந்தாள்; ‘ஆடல்
பாடல் வியந்தாள்’ என்னலாம். (43)

உம்   உந்தாகவும்   மாறும்   உ-ம்:    கூஉப்பெயர்க்கும்-கூஉப்
பெயர்க்குந்து  உம்  பெயருடன்  வருதல்  பெரும்பான்மை. ‘உண்டும்
தின்றும், என வினையுடனும் வரும். (45)

ஓ:  பிரிநிலை வினா எதிர்மறை  ஒழியிசை  தெரிநிலை சிறப்பு என
ஆறு பொருள்களில் வரும்.  (8) சிறப்புப் பொருளில் வரும் போது
அளபெடையாக வரும். உ-ம் : ஓஒ பெரியன். (13)

ஏ: தேற்றம்   வினா  பிரிநிலை    எண்   ஈற்றசை  என   ஐந்து
பொருள்களில்   வரும். (9)   தேற்றப்   பொருளில்   வரும்போது
அளபெடையாய் வரும். உ-ம்  : உண்டேஎ மறுமை. (13) இசைநிறை
அசைநிலைப்பொருள்களிலும்   வரும்.   (24)   ஈற்றசை   ஏகாரம்
அகப்பொருட்கூற்றில் ஓரளவாகவும் வரும்.  “கடல்போல் தோன்றல
காடிறந்தோரே” என்பதில்  ‘காடிறந்தோரே’ என்பது ‘காடிறந்தோரே
என ஒலிக்கப் படுவதாகக் கொள்க. (38) எண்ணுப் பொருளில் வரும்
ஏகாரம் எண்ணப்படும்  பொருள்தோறும்  வாராமல்  இடையிட்டும்
வரலாம். ‘மலை நிலம் பூவே  துலாக்கோல்  என்றின்னர்’ என்பதில்
இடையே  ‘பூவே’  என வந்த ஏகாரம்  மற்றைய வற்றிலும் சென்று
இயைவது காண்க. (40)

என : வினை  குறிப்பு  இசை பண்பு  எண் பெயர் என்னும் ஆறு
பொருள்களில் வரும். (‘அழுக்காறென ஒரு பாவி’ (குறள்) என்பதில்
என  என்னும் சொல்  ‘என்பது’ என்னும் பெயர் நிலையில் வந்தது.)
எண்ணுப் பொருளில் வரும்  போது தொகை  பெற்றும்  பெறாதும்
வரும். உ-ம்:  நிலனென நீரென இரண்டு,  ‘நிலனென நீரென’ (39)
பெயருடன் வருதல்