பி.இ. நூ : நேமி. சொ. 54. “சிறப்பும் வினாவும் தெரிநிலையும் எண்ணும் உறப்பின் எதிர்மறையி னோடும் - வெறுத்த ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரம்.” நன். 423. ஒழியிசை வினாச்சிறப்பு எதிர்மறை தெரிநிலை கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓவே. இல. வி. 253. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவு பிரிப்பு அசைநிலை என எட்டு ஓவே. தொன். 132. ஓ பிரிப் பசைநிலை ஒழிவு எதிர்மறை வினாத் தெளிவு கழிவு சிறப்பென எட்டே. முத்து. ஒ. 6. தெரிநிலை எதிர்மறை சிறப்புப் பிரிநிலை ஒழியிசை வினா ஆறு ஓகாரம்மே. இளம். வ-று : பிரிநிலை : அவனோ கொண்டான் என்பது. வினா : அவனோ அவனோ என்பது, எதிர்மறை : யானோ கொண்டேன் என்பது. ஒழியிசை : கொளலோ கொண்டான் என்பது. ‘கோடற்குத் தகுமாயினும் கொண்டுய்யப் போயினா னல்லன்’ என ஒழிவுபட வந்தமையான் ஒழியிசையாயிற்று. தெரிநிலை : ‘நன்றோ அன்று; தீதோ அன்று; இடைநிகர்த்ததாயிற்று என்பது. சிறப்பு; ஓஓ பெரியன் என்பது. சேனா. இ-ள் : பிரிநிலைப்பொருட்டாவது முதலாக ஒகாரம் அறு வகைப்படும், எ-று. உ-ம் : “யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே” (குறுந். 21) என்பது தேறுவார் பிறரிற் பிரித்தலின் பிரிநிலை எச்சமாயிற்று. |