‘மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும்’ (உயிர்மய.88) என்னுஞ் சூத்திரத்தால் ஐயமும் கொண்டார். அது, ‘பத்தோ பதினொன்றோ?’ எனவரும். கல். என்- எனின், இதுவும் அது. இ-ள் : பிரிநிலைப் பொருண்மை, வினாப்பொருண்மை, எதிர்மறைப் பொருண்மை, ஒழியிசைப் பொருண்மை, தெரிநிலைப் பொருண்மை, என இவற்றைச் சிறப்புப் பொருண்மை யோடு தொகுத்து ஆறு என்று சொல்லுப ஆசிரியர், ஓகாரத்துப் பொருண்மை, எ-று. உ-ம் : பிரிநிலை : அவனோ கொண்டான் என்பது இஃது இப்போது வினாவாய் நடக்கின்றதெனவுணர்க. இனிவினா : ‘அவனோ அல்லனோ’ இனி எதிர்மறை : ‘யானோ கொள்வேன்’ என்பது. இனி ஒழியிசை : ‘கொளலோ கொண்டான்’ என்பது, இனித் தெரிநிலை : நன்றோ வன்று; தீ தோவன்று’ என்பது இனிச் சிறப்பு : ‘ஓ பெரிது’ என்பது. ஆதி. உ-ம் : இவனோ திருடன் - பிரிநிலை இவனோ திருடன் - வினா இவனோ திருடன் - எதிர்மறை பிச்சைக்கோ வந்தான் - ஒழியிசை (திருட) ஆணோவன்று : பெண்ணோவன்று - தெரிநிலை ஓ! நன்கு படித்தாய் - சிறப்பு இசரயேல். அன்னையோ யாம்எம் மகளைப் பாராட்டக் கதுமென (கலி. 85) - வியப்பு. கேளாய் வாழியோ மகளை நின்தோழி (அகம், 63) - அசை நிலை. (இடையும் உரியும் பக். 21) ஏ |