சொல்லதிகாரம் - இடையியல்67

ஆ.மொ :

இல.

The  'ē'  serves  five  purposes which  are   denoting   clearness,
interrogativeness,  separation  and  enumeration,  and  being  final
syllable.
 

ஆல்.

‘ē’ goes  with  the  five  expressions of clarity of choice,
interrogation,   doubt,  enumeration  and  the  final enphonic
phoneme.

பி.இ,நூ :

நேமி. சொ. 57

தேற்றம் வினாஎண் எதிர்மறையும் தேமொழியாய்
ஈற்றசையும் ஏகாரம் என்.

நன். 422.

பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்  
இசைநிறை என ஆறு ஏகாரம்மே.

இல. வி. 252.

தேற்றம் வினாஎண் பிரிநிலை எதிர்மறை  
ஈற்றசை என ஆறு ஏகா ரம்மே.

தொன். 131

ஏஎன் இடைச்சொல் ஈற்றசை தேற்றம் எண்
வினாப்பிரி நிலை இசைநிறை என ஆறே.

முத்து. ஒ. 7

எண்ணே பிரிநிலை ஈற்றசை தேற்றம்
வினாவோ ரைந்தும் விளக்கும் ஏகாரம்.

இளம்.

வ-று : தேற்றம் : ‘அவனே கொண்டான்   என்பது.
வினா : ‘நீயே கொண்டாய்’ என வினாவிச் சொல்வது.
பிரிநிலை : ‘ அவனே  கொண்டான்’    என்பது;  பலருள்
ஒருவனைப் பிரித்துச் சொல்லியது.
எண் : நிலனே நீரே  தீயே வளியே ஆகாயமே எனவரும்.