ஈற்றசை : 1 “கடல்போற் றோன்றல காடிறந் தோரே” (அகம். 1) எனவரும் ஈற்றின்கண் என்றவாறு. சேனா. இ-ள் : தேற்றேகார முதலாக ஏகாரம் ஐந்து, எ-று. உ-ம் : ‘உண்டே எ மறுமை’ எனத் தெளிவின்கண் வருதலின் தேற்றேகாரம். ‘நீயே கொண்டாய்’ என வினாப் பொருள் உணர்த்தலின் வினாவேவகாரம். ‘அவருள் இவனே கள்வன்’ எனப் பிரித்தலின் பிரிநிலை யேகாரம். ‘நிலனே நீரே தீயே வளியே’ என எண்ணுதற்கண் வருதலின் எண்ணேகாரம். ‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம்.1) என்பது செய்யுள் இறுதிக்கண் வருதலின் ஈற்றசையேகாரம். 2‘வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந்.216) எனச் செய்யுளிடையும் வருதலின் ஈற்றசை என்பது மிகுதி நோக்கிச் சென்றகுறி. தெய். இதுவுமது. இ-ள் : தோற்றம் முதலாக ஐந்து பகுதிய : ஏகார இடைச் சொல், எ-று. உ-ம் : ‘அவனோ செய்தான்’ என்பது துணிவு குறித்த வழித் தேற்றேகாரமாம். ஈண்டு அளபெடை வரும். வினாக் குறித்தவழி வினாவேகாரமாம். ‘யானே வந்தேன்’ என்ற வழிப் பிறர் கூடலின்றியே எனப் பொருள்படுதலிற் பிரிநிலை யேகாரமாம். எண்ணுக் குறித்துவரும் சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம்........ ஈற்றசை என்பது சொல்லின் இறுதிக்
1. பொருள் : கடல் போல் தோன்றுதலையுடைய காட்டைக் கடந்து சென்ற நம்தலைவர். 2. பொருள் : வாடாத வள்ளிக் கொடிபடர்ந்த காட்டைக் கடந்தார். “வாடா வள்ளி யங் காடிறந்தோரே” என்பது செய்யுளின் ஈற்றடியன்மையின் இவ்வாறு எழுதினார். |