சொல்லதிகாரம் - இடையியல்70

இ-ள் : தேற்றப் பொருண்மை  வினாப்  பொருண்மை பிரிநிலைப்
பொருண்மை   எண்ணுப் பொருண்மை ஈற்றசையாதல் என இவ்வைந்து
வகைப்படும் ஏகாரம், எ-று.

உ-ம் : தேற்றம் - அவனே கொண்டாய்
இனி வினா : நீயே கொண்டாய்.
இனிப்பிரிநிலை : அவனே கொண்டான்
இனிஎண் : நிலனே நீரே தீயே வளியே
இனி ஈற்றசை : ‘கடல் போல் தோன்றல காடிறந்

தோரே’. ஈற்றசை   என்றமையான்  மொழிமுதற்கண்  அசையாகாது
என்பது.

ஆதி.

உ-ம் : ஒன்றே தெய்வம் - தேற்றம்
இவனே திருடன் - வினா
இவனே திருடன் - பிரிநிலை
மானே மரமே மயிலே குயிலே - என எண்
இயம்புவன் எழுத்தே - ஈற்றசை
பொன். கோதண்டராமன்.

இவர்   ஏகாரம்     தரும்    பலபொருள்களையும்    தொகுத்துக்
கூறியுள்ளார். அவை உதாரணங்களுடன் வருமாறு :-

1. எதிர்மறை - அவர்   வாரிவாரிக்  கொடுப்பாரே  என்ற  வழிச்
சிறிதும்   கொடார்   என்ற   பொருளில்   நிற்றலின்    எதிர்
மறையாயிற்று.

2. கருதல் : - ‘அவர்  இன்று  இங்கு  வருவரே’ என்றவழி அவர்
எப்போதும்போல இன்றும் வருவார் என்று கருதுவதைக் குறித்து
நிற்றலின் கருதலாயிற்று.

3. 1விலக்கு -  ‘அவரே  போகட்டும்’  என்றவழிப்  பிறர்  போக
வேண்டா அவரே போகட்டும் என்று பொருள் பயத்தலின்  இது
விலக்காயிற்று. அவரே போகட்டும் என்று மற்றவரை விலக்குதல்
காண்க.

4. மிகை -  ‘இதன் பொருள் ஆசிரியர்க்கே  தெரியாது” என்றவழி
மிகைப்படுத்திக் கூறிய குறிப்புக்  காணப்படுதலின்  இது  மிகை.
‘பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்பதும் அது. 


1. இதுபிரிநிலையின் பாற்படும்.