எ.டு : - உண்டோ மறுமை, வாய்மையே வெல்லும், என வரும் இவை தேற்றேகாரம். நீ யே கொண்டாய்? என்பது வினா ஏகாரம். இவனே வலியன் - என்பது பிரிநிலை ஏகாரம். நிலனே, நீரே, தீயே, வளியே என எண்ணுதற்கண்வரும் ஏகாரம் எண்ணேகாரம். வாடா வள்ளியங்காடிறந்தோரே - எனச் சீர் இறுதிக்கண் வரும் ஏகாரம் ஈற்றசை ஏகாரம். ஈறு என்பதற்குச் செய்யுளீறு எனப்பொருள் கூறின் குன்றக் கூறலாம் என்க. ஏகாரம் அசையாக முதற்கண்ணும் வருமாதலின் ஈற்றசை என்றால், பொருட்குறிப்புகளோடு அசைநிலையையும் உடன் ஓதினார். “கூற்றுவயின் ஒரளபாக இசைத்தலும் உரித்” தெனப் பின்னர் எடுத்து விதத்தலைக் கருதி என்க. ஏகார இடைச் சொல்லின் இயல்புபற்றி ஒருங்கு கூறினார் எனினும் அமையும். என |