உ-ம் : 3கார் வரும்எனக் கருதி நொந்தாள், துண்ணெனத் துடித்தது மனம், ஒல்லென வொலித்தது, வெள்ளென விளர்த்தது, நிலனென நீரெனத் தீயென வளியென, அழுக்கா றெனவொரு பாவி (குறள். 168) எனவரும். 4 ‘நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து’, (புறம்.243) என்பதும் இசை. கல். என்-எனின், இது பொருள்படுவதொன்று உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் ; முன்னின்ற வினைச் சொல்லைப் பின்வரும் வினைச் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மையும், குறிப்புப் பொருண்மைக்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வருஞ் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மையும், இசைப் பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வருஞ் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மையும், பண்புப் பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வருஞ் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மையும்...5 ஆதி. உ-ம் : வந்தான்என மகிழ்ந்தேன் - வினையுடன் சில்லெனக் குளிர்ந்தது - குறிப்பு ஆஅஅ என இசைத்தார் - இசை கரு கருவென இருட்டியது - பண்பு நீரென நிலமென வளியென வெளியென நீயென - எண் குமணன் என ஒரு வள்ளல் - பெயர்.
3. பொருள் : கார்காலம் வரும் எனக் கருதி வருந்தினாள். 4. பொருள் : ஆழமான நீர் நிறைந்த குளத்தில் துடும் என்னும் ஒலி எழும்படியாகப் பாய்ந்து. 5. இதன் பின்னர் உள்ள உரைகள் கிடைக்கப் பெறவில்லை. தமிழ்நாடு அரசின் தெ. பொ. மீ. யின் பதிப்பில் (1971) ‘மியாயிக’ (இடை) என்னுஞ் சூத்திரமும் அதன் சிதைந்தவுரையுமட்டும் காணப்படுகின்றன. அச்சூத்திரத்திற் காண்க. |