பி. இ. நூ : நேமி. சொ. 53. வினை பெயரும் எண்ணும் இசை குறிப்பும் பண்பும் என என்று இரண்டும் இயலும். நாள். 424 வினைபெயர் குறிப்புஇசை எண் பண்பு ஆறினும் எனவெனும் மொழிவரும் என்றும் அற்றே. இல. வி. 255. வினைபெயர் குறிப்புஇசை எண் பண்பு ஆறினும் எனவெனும் மொழிவரும் என்றும் அற்றே. தொள். 133 எனவென்பது உவமை எண்குணம் வினைபெயர் இசை குறிப்பு இயலும் என்றும் இனைத்தே. முத்து. ஒ. 8. எண்ணே குறிப்பே இசையே பண்பே வினையே பெயரே என ஓர் ஆறினும் எனவெனும் மொழிவரும் என்றும் அற்றே. இளம். வ-று : வினை - கொள்ளென்று கொண்டான் என்பது, குறிப்பு - விண்ணென்று விசைத்தது என்பது துண்ணென்று துடித்தது என்பது மது, இசை- ‘ஒல்லென்று ஒலிக்கும்’ (ஐந்திணை யைம்பது. 28) என்பது. பண்பு - வெள்ளென்று விளர்த்தது என்பது. எண் - நிலனென்று வளியென்று என வரும். பெயர் - ஊரென்று சொல்லப்படுவது உறையூர் என்பது. சேனா. இ-ள் : என்று என்னும் இடைச் சொல்லும் என என்பது போல அவ் ஆறுபொருளும் குறித்து வரும், எ-று. உ-ம் : “நரை வருமென்றெண்ணி” (நாலடி-11) எனவும், விண்ணென்று விசைத்தது எனவும், |