சொல்லதிகாரம் - இடையியல்80

ஆதி.

என்று என்பதும்  என  என்பது  போன்றே அவ்வாறு பொருளிலும்
வரும். முந்து விளக்க முறையே கொள்க.

பால.

என்று என்னும் செய்தென்  எச்சம்  வேறு இவ்விடைச் சொல்வேறு
என அறிக.

தில் - புறனடை
 

255.

விழைவின் றில்லை தன்னிடத் தியலும்            (12)

(விழைவின் தில்லை தன்இடத்து இயலும்)
  

ஆ. மொ :

இல.

The morpheme ‘thil’ which denotes   desire, belongs to the
first person only.

ஆல் :

[til] with the implied   expression of desire occurs with the
first person.

இளம்.

இச்சூத்திரம்     என்னுதலிற்றோவெனின்,   மேல்   (இடை.5) தில்
என்னும்   இடைச்சொல்   மூன்றன்   பொருட்கும்    உரித்து  என்று
போந்தார் :   அவற்றுள்  விழைவின்  தில்லை தன்மை   யிடத்திற்கே
யாவது.

வ-று : ‘பெறுகதில் அம்ம யானே’                (குறுந். 14)

என வரும்.

எனே்வ,   மற்றைய    இரண்டும்    எல்லாவிடத்துக்கும்    உரிய
என்றவாறாம்.

சேனா.

இ-ள் : ‘அம்மூன்றென்ப    தில்லைச்   சொல்’   (இடை.5) என்று
சொல்லப்பட்ட    மூன்றனுள்     விழைவின்கண்    வரும்   தில்லை
தன்மைக்கண் அல்லது வாராது, எ-று.

தன்மைக்கண்     வருதல்   மேற்காட்டப்பட்டன     வற்றுள்ளும்
பிறாண்டும் கண்டு கொள்க.