சொல்லதிகாரம் - இடையியல்84

இ-ள் : தெளிவின்  ஏயும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய
என்ப   -   முற்கூறிய  தெளிவின்கண்   வரும்  ஏகாரமும்  (இடை.9)
சிறப்பின்கண்  வரும்   ஓகாரமும்  (இடை.8)   இரண்டு  மாத்திரையின்
மிக்கு மூன்று மாத்திரையினையுடைய என்று கூறுவர் ஆசிரியர்,   எ-று.

உ-ம் : உண்டே எ மறுமை,

1 “ஓஒ உவமன் உறழ்வின்ற ஒத்ததே”           (களவழி. 36)

ஆதி.

தெளிவுப் பொருளில் வரும்  ஏ, சிறப்புப்  பொருளில்    வரும்  ஓ
அளவு நீண்டு ஒலிக்கும்,

ஒன்றே எ தெய்வம் - தெளிவு ஏ.
ஓஒ! அவர்மிகப் பெரியர் - சிறப்பு ஓ.

மற்று
  

257.

மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
யப்பா லிரண்டென மொழிமனார் புலவர்.          (14)

(மற்றுஎன் கிளவி வினைமாற்று அசைநிலை
அ பால் இரண்டு என மொழிமனார் புலவர்)
 

ஆ. மொ :

இல.

The morpheme ‘Mauŗŗu’ functions in two ways-it changes the
sense  of  the verb and it serves as a syllable- the scholars
say.

ஆல்.

Scholars tell us that the  morpheme /Mauŗŗu/ behaves in two
ways; conjunctor of antonyms and euphonic empty morph.

பி. இ. நூ :

நன். 433.

வினைமாற் றசைநிலை பிறிதுஎனும் மற்றே.

இல. வி. 266

மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை

முத்து. ஒ. 10

மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை


1. பொருள் : ஓ! ஓ! உவமம் உயர்வு தாழ்வின்றி ஒத்தது.