சொல்லதிகாரம் - இடையியல்85

இளம்.

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ வெனின், மேல் தத்தம்  குறிப்பிற்
பொருள்   செய்குவன   உணர்த்தினார்;   இனி   மற்று   என்பதோர்
இடைச்சொல்  வினைமாற்றும்  அசை  நிலையுமாய்    வரும்  என்பது
உணர்த்துகின்றார்.

வ-று ; ‘இஃது உண்’   என்றார்க்கு,   1 ‘மற்று    உண்பன்’  என
வினைமாற்று ஆயிற்று.

யாவரோ  டாயினும்  சொல்லாடா  நின்று  ‘மற்றோமற்று’  என்னும்
இடையே; இஃது 2 அசை நிலைக் கட்டுரை.

சேனா.

இ-ள் : மற்று என்னும்  சொல்  வினைமாற்றும் அசைநிலையும் என
இரண்டாம், எ-று.

உ-ம் : ‘மற்றறிவாம்    நல்வினை’    (நாலடி.1) என்ற வழி ‘அறஞ்
செய்தல் பின் அறிவாம்’ என அக்காலத்து  வினை  மாற்றுதலான் மற்று
என்பது  வினை மாற்றின்கண் வந்தது.  3 ‘அது மற்றவலங் கொள்ளாது
நொதுமலற் கலுழும்’ (குறுந்.12) என அசைநிலையாய்   வந்தது. கட்டுரை
இடையும் ‘மற்றோ’ என அசைநிலையாய் வரும்.

தெய்.

ஒரு பொருள் குறித்த இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : மற்று என்னும்  இடைச்சொல்  ஒரு  வினையை  மாற்றுதற்
பொருட்கண்ணும் அசைநிலையாகியும் வரும், எ-று.

உ-ம் : ‘மற்றறிவா நல்வினை யாமிளையம்’  (நாலடி.  19) என்றவழி
‘மற்று’ என்பது ‘பின்பு அறிவாம்’ என அக்


1. மற்று உண்பன- இப்பொழுது உண்ணேன் பிறகு உண்பேன் என
அப்பொழுது உண்ணும் வினையை மாற்றுதலின் வினைமாற்று.

2. அசைநிலைக் கட்டுரை : பேசும்போது   கூறப்படும் அசைநிலை.
கட்டுரை - வழக்கு.

3. பொருள் : இவ்வூர் அவ்வழியின்   கொடுமை பற்றித் துயரம்
கொள்ளாமல் அயலான் சொற்களைக்கூறி இடித்துரைக்கும்.