காலத்துச் செய்கின்ற வினையை மாற்றி நின்றது. 1 ‘மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்’ என்ற வழி அசைநிலை யாயிற்று. நச். இது, பொருள்படுமாறும் அசைநிலையும் கூறுகின்றது. இ-ள் : மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை அப்பால் இரண்டு என மொழிமனார் புலவர் - மற்று என்னும் சொல்முன் சொல்கின்றது ஒழிய இனி வேறு ஒன்று என்னும் பொருண்மையும் அசைநிலையாதலும் என்னும் அக்கூற்று இரண்டாம் என்று கூறுவர் புலவர், எ-று. உ-ம் : இனி மற்றொன்று உரை, ‘மற்றறிவாம் நல்வினை யாமிளையம்’ (நாலடி.19), ‘மற்றுங் கூடும் மனைமடி துயிலே’ (நற்.360) எனத் தொழிலும் காலமும் இடமும் பற்றி வரும். ‘அது மற்றவலம் கொள்ளாது’ (குறுந். 12) என்பது அசை நிலை. உரையாடா நின்றுழிப் பொருள் குறியாது ‘மற்றோ’ எனவும் அசைநிலை வரும் என்பாரும் உளர். வெள். இது, மற்று என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறகின்றது. இ-ள் : மற்று என்னுஞ் சொல் வினைமாற்றும் அசைநிலையும் என இரண்டாம் என்பர் ஆசிரியர், எ-று. வினை மாற்று என்பது, ஒரு வினை நிகழ்ச்சியை மாற்றுதற் பொருள்பட வருவது. ‘மாற்றறிவாம் நல்வினையாம் இளையம்’ (நாலடி.19) என்றவழி ‘அறஞ்செய்தல் பின் அறிவாம்’ என அக்காலத்து வினை மாற்றுதலான் மற்று என்பது வினை மாற்றின் கண் வந்தது. “அதுமற் றவலங் கொள்ளாது, நொதுமற் கலுழும்இவ் வழுங்கலூரே” என்புழி மற்று அசை நிலையாய் வந்தது. மற்று என்னும் இவ்விடைச் சொல் வினைமாற்றாகவும் அசைநிலையாகவும் வருதேலேயன்றிச் ‘சொல்கின்றது ஒழிய இனி வேறோன்று’ என்ப ‘பிறிது’ என்னும் பொருளிலும் இலக்கியங்களிற் பயில்கின்றது. ‘மற்று’ என்பது ‘பிறிது’
1. பொருள் : அடிகளே! மலரடிக் கீழ்க்கண்டு இருக்க அருள்செய்க. |