சிதம்பரப்பாட்டியல் மூலமும் உரையும். காப்பு நினைத்தவர்க்கு மன்றி நினைக்குமவர் தம்மை நினைப்பவர்க்கு முத்தி நிரம்பும் -அனைத்துமாம் ஆரணத்து முன்னவனு மம்பிகையும் பெற்றமத வாரணத்தின் பாத மலர். பாடலாஞ் செந்தமிழைப் பாடி யரனருளைக் கூடலா மின்பநலங் கொள்ளலாம் - பேடனாய் நாட்டியசீர்ப் பாவினங்க ணாடுஞ் சிதம்பரப் பாட்டியலைக் கற்றார் பயன். பாடு முறைமைக்கும் பன்னு தமிழ்தெளிந்து சூடும் பனுவற்குச் சொற்பொருள்க-ணாடுதற்கும் எண்ணிலராய் நின்றாரு மிந்நூல் வினவினரேற் கண்ணிலான் காட்சியது காண். பூமன்னு பொழில்வெண்ணை மெய்கண்டான் கச்சிப் புகழ்புனைதத் துவஞான ப்ரகாசமாய் வந்து பாமன்ன வுரையென்ன வவனருளா லவன்றன் பதம்பரவிச் சிதம்பரப்பாட் டியலெனப்பேர் வகுத்தான் மாமன்னு சிதம்பரபு ராணமுத னூலு மதுரையுலா வும்பகர்ந்தோன் மருவுகுல மைந்தன் தேமன்னு புராணகலை பலதெரிபு ராணத் திருமலைநா யகனருளின் றேசுபூண் டோனே. சிதம்பரப் பாட்டியலைச் செய்தான் றமிழாற் சிதம்பர புராணமுதற் செய்து-விதம்பெறுசீர் சேர்ந்த புராணத் திருமலைநா தன்றவத்தாற் சார்ந்தபரஞ் சோதியென்பான் றான். |