பக்கம் எண் :
 
67

5. தாதுப்படலம்1

60. தாதுக்களை ஆக்கும் வகை

மன்னிய சீர்வட நூலிற் சரபச வென்றுவந்து
துன்னிய தாதுக் களின்போலி போலத் தொகுதமிழ்க்கும்
பன்னிய தாதுக் களைப்படைத் துக்கொள்க; முன்னிலையின்
உன்னிய வேவ லொருமைச்சொற் போன்றுல கிற்கொக்கவே.

(இ-ள்.) வடநூலில் தாதுவின்கண் சர என்றும் பச என்றும் மத்திம புருடனிலே விதி என்னும் ஏவற்பொருளின்கண் ஏக வசனாந்தப் பொருள் போற் கிடந்தது ஆதலால், தமிழ்ச் சொல்லினுக்கும் தாதுக்களை அது போலத் தோற்றுவித்துக்கொள்க. படைக்குமிடத்து முன்னிலை ஏவற்பொருளின் உலகத்தார்க்கு ஒக்க ஒருமைச் சொற்போலப் படைக்க (எ-று.)

அஃதாமாறு:- சர என்னுந் தாதுவின் பொருட்போலியும், பச என்னுந் தாதுவின் பொருட்போலியும் போல, நட என்பதும் அடு என்பதுமாம். அப்பரிசே கிடந்தன எண்ணிறந்த தாதுக்களுளவாதலால், தமிழினுக்கும் நட, அடு என்னும் இவை முதலாகிய தாதுவாய் அவை முன்னிலையிடனில் ஏவற்பொருளில் ஒருமைப் பொருட்போலி போன்றன. நட என்பது ஒருவனை நட என்றும், அடு என்றது ஒருவனை அடு என்றும் ஏவினாற் போன்றது. அதற்குக் காரணம் என்னை எனின், சுவ்வென்னும் பிரத்தியத்தான் முடிந்தாலல்லது நடப்பது அடுவதான பொருள்களைப் பயவா. அப்பொருள் போன்றிருப்பது மாத்திரமே என்க. 'முடியாத பொழுதும் அப்படியே கிடப்பதாயின் முடித்துப் பயனென்னை?' எனின், அது வடநூல் தாது விதி என்க. அன்றியும், அதனைத் தாதுவாக வைத்து மற்றைக் கிரியா பதங்களை முடித்தலாலும் அமையுமென்க. தமிழ்ச் 2சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின், அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்குப் பெறும். அப்படித் தோற்றுவித்துக்கொள்ளுந் தாதுக்களும்


1. இது தாதுக்களைக் கூறும் படலம் என்றாம்.

2 'ஈண்டுச் சொல்லென்றார் சொல்லினதிலக்கணத்தை,' என்பது பழைய குறிப்பு.