தொடக்கம் | ||
மொழியிறுதி எழுத்துக்கள்
|
||
69. | உயிர், `ஒள' எஞ்சிய இறுதி ஆகும். | உரை |
70. | கவவொடு இயையின், ஒளவும் ஆகும். | உரை |
71. | எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. | உரை |
72. | ஒவ்வும் அற்றே, `ந' அலங்கடையே. | உரை |
73. | ஏ, ஓ, எனும் உயிர் ஞகாரத்து இல்லை. | உரை |
74. | உ, ஊகாரம் நவவொடு நவிலா. | உரை |
75. | உச் சகாரம் இருமொழிக்கு உரித்தே. | உரை |
76. | உப் பகாரம் ஒன்று' என மொழிப; இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. |
உரை |
77. | எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. | உரை |
78. | ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்னும் அப் பதினொன்றே புள்ளி இறுதி. |
உரை |
79. | உச் சகாரமொடு நகாரம் சிவணும். | உரை |
80. | உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே; அப் பொருள் இரட்டாது இவணையான. |
உரை |
81. | வகரக் கிளவி நான்மொழி ஈற்றது. | உரை |
82. | மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப புகர் அறக் கிளந்த அஃறிணை மேன |
உரை |