தொடக்கம் | ||
உயிரெழுத்துக்கள் பொதுவாகப் பிறக்குமாறு
|
||
84. | அவ் வழி, பன்னீர்-உயிரும் தம் நிலை திரியா, மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். |
உரை |
85. | அவற்றுள், அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும். |
உரை |
86. | இ, ஈ, எ, ஏ, ஐ, என இசைக்கும் அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன; அவைதாம் அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. |
உரை |
87. | உ, ஊ, ஒ, ஓ, ஓள, என இசைக்கும் அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். |
உரை |
88. | தம்தம் திரிபே சிறிய என்ப. | உரை |
89. | ககார ஙகாரம் முதல் நா அண்ணம். | உரை |
90. | சகார ஞகாரம் இடை நா அண்ணம். | உரை |
91. | டகார ணகாரம் நுனி நா அண்ணம். | உரை |
92. | அவ் ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின. | உரை |
93. | அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் நா நுனி பரந்து மெய் உற ஒற்ற, தாம் இனிது பிறக்கும்-தகார நகாரம். |
உரை |
94. | அணரி நுனி நா அண்ணம் ஒற்ற, றஃகான், னஃகான், ஆயிரண்டும் பிறக்கும். |
உரை |
95. | நுனி நா அணரி அண்ணம் வருட, ரகார, ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். |
உரை |
96. | நா விளிம்பு வீங்கி, அண்பல் முதல் உற, ஆவயின் அண்ணம், ஒற்றவும், வருடவும், லகார, ளகாரம், ஆயிரண்டும் பிறக்கும். |
உரை |
97. | இதழ் இயைந்து பிறக்கும்-பகார, மகாரம். | உரை |
98. | பல் இதழ் இயைய, வகாரம் பிறக்கும். | உரை |
99. | அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை கண்ணுற்று அடைய, யகாரம் பிறக்கும். |
உரை |
100. | மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும், மூக்கின் வளிஇசை யாப்புறத் தோன்றும். |
உரை |