தொடக்கம் | ||
மொழிகளின் முதலும் ஈறும்
|
||
104. | மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின், இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது, அறு-நான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும் எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும், மெய்யே, உயிர், என்று ஆயீர் இயல. |
உரை |
105. | அவற்றுள், மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல். |
உரை |
106. | குற்றியலுகரமும் அற்று' என மொழிப. | உரை |
107. | உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. | உரை |
108. | உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும், உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும், மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும், மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும், என்று இவ் என அறியக் கிளக்கும் காலை- நிறுத்த சொல்லே, குறித்து வரு கிளவி, என்று ஆயீர் இயல-புணர் நிலைச் சுட்டே. |
உரை |