தொடக்கம் | ||
மாத்திரை
|
||
3. | அவற்றுள் `அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப. |
உரை |
4. | ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் அப்பால் ஏழும் ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து' என்ப. |
உரை |
5. | மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. | உரை |
6. | நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய கூட்டி `எழூஉதல்' என்மனார் புலவர். |
உரை |
7. | கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை- நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. |
உரை |