தொடக்கம் | ||
சாரியைப் புணர்ச்சி
|
||
119. | அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. | உரை |
120. | அவைதாம், இன்னே, வற்றே, அத்தே, அம்மே, ஒன்னே, ஆனே, அக்கே, இக்கே, .அன் என் கிளவி உளப்பட, பிறவும் அன்ன' என்ப-'சாரியை மொழியே'. |
உரை |
121. | அவற்றுள், இன்னின் இகரம் ஆவின் இறுதி முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும். |
உரை |
122. | அளவு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே. |
உரை |
123. | வஃகான் மெய் கெட, சுட்டு முதல் ஐம் முன், அஃகான் நிற்றல் ஆகிய பண்பே. |
உரை |
124. | னஃகான், றஃகான் நான்கன் உருபிற்கு. | உரை |
125. | ஆனின் னகரமும் அதன் ஓரற்றே, நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே. |
உரை |
126. | அத்தின் அகரம் அகர முனை இல்லை. | உரை |
127. | இக்கின் இகரம் இகர முனை அற்றே. | உரை |
128. | ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும். | உரை |
129. | எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கின் இறுதி மெய்ம் மிசையொடும் கெடுமே; குற்றியலுகரம் முற்றத் தோன்றாது. |
உரை |
130. | அம்மின் இறுதி, க, ச, த-க் காலை, தன் மெய் திரிந்து, ங, ஞ, ந, ஆகும். |
உரை |
131. | மென்மையும் இடைமையும் வரூஉம் காலை இன்மை வேண்டும்' என்மனார் புலவர். |
உரை |
132. | இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு இன் என் சாரியை இன்மை வேண்டும். |
உரை |
133. | பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப, வேற்றுமை உருபு நிலைபெறு வழியும், தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி, சொற் சிதர் மருங்கின், வழி வந்து விளங்காது இடை நின்று இயலும், சாரியை இயற்கை; உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். |
உரை |
134. | அத்தே, வற்றே, ஆயிரு மொழிமேல் ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே; அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. |
உரை |