உயிரீறு மெய்யீறுகளின் பொதுப் புணர்ச்சி
 
144. க, ச, த, ப, முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்,
ங, ஞ, ந, ம என்னும் ஒற்று ஆகும்மே-
அன்ன மரபின் மொழிவயினான.
உரை
   
145. ஞ, ந, ம, ய, வ, எனும் முதல் ஆகு மொழியும்,
உயிர் முதல் ஆகிய மொழியும், உளப்பட,
அன்றி அனைத்தும், எல்லா வழியும்,
நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே.
உரை
   
146. அவற்றுள்,
மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்-
சொல்லிய தொடர்மொழி இறுதியான.
உரை
   
147. ண, ன, என் புள்ளி முன், யாவும் ஞாவும்,
வினை ஓரனைய' என்மனார் புலவர்.
உரை
   
148. மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும்
வருவழி, நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே.
உரை
   
149. வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி,
மேற் கூறு இயற்கை ஆவயினான.
உரை
   
150. வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி,
மேற் கூறு இயற்கை ஆவயினான.
உரை
   
151. ண, ள, என் புள்ளி முன் ட, ண, எனத் தோன்றும். உரை