புறனடை
 
172. 'ஈறு இயல் மருங்கின், இவை இவற்று இயல்பு' எனக்
கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்
மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி,
ஒத்தவை உரிய, புணர் மொழி நிலையே.
உரை
   
173. பலர் அறி சொல் முன் யாவர் என்னும்
பெயரிடை வகரம் கெடுதலும், ஏனை
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை
ஒன்றிய வகரம் வருதலும், இரண்டும்
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே.
உரை