தொடக்கம் | ||
உயிரீறுகள்
|
||
174. | அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள என்னும் அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர், வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை. |
உரை |
175. | பல்லவை நுதலிய அகர இறுபெயர் வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. |
உரை |
176. | யா' என் வினாவும் ஆயியல் திரியாது. | உரை |
177. | சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி, ஒட்டிய மெய் ஒழித்து, உகரம் கெடுமே. |
உரை |
178. | சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே |
உரை |
179. | யா என் வினாவின் ஐ என் இறுதியும் ஆயியல் திரியாது' என்மனார் புலவர்; ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே. |
உரை |
180. | நீ' என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்; ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே. |
உரை |
181. | ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை | உரை |
182. | அ, ஆ, என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு அத்தொடும் சிவணும் ஏழன் உருபே. |
உரை |