தொடக்கம் | ||
மெய்யீறுகள்
|
||
183. | ஞ, ந, என் புள்ளிக்கு இன்னே சாரியை. | உரை |
184. | சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே. |
உரை |
185. | ஏனை வகரம் இன்னொடு சிவணும். | உரை |
186. | மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. | உரை |
187. | இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. | உரை |
188. | `நும்' என் இறுதி இயற்கை ஆகும். | உரை |
189. | `தாம், நாம்' என்னும் மகர இறுதியும் `யாம்' என் இறுதியும் அதன் ஓரன்ன; ஆ எ ஆகும், யாம் என் இறுதி; ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்; ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும். |
உரை |
190. | `எல்லாம்' என்னும் இறுதி முன்னர், 'வற்று' என் சாரியை முற்றத் தோன்றும்; உம்மை நிலையும் இறுதியான. |
உரை |
191. | உயர்திணை ஆயின் நம் இடை வருமே. | உரை |
192. | எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும், எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும், ஒற்றும் உகரமும் கெடும்' என மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி; உம்மை நிலையும் இறுதியான; தம் இடை வரூஉம், படர்க்கை மேன; நும் இடை வரூஉம், முன்னிலை மொழிக்கே. |
உரை |
193. | தான், யான்' என்னும் ஆயீர் இறுதியும் மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே. |
உரை |
194. | அழனே, புழனே, ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்தது' என்ப, உணருமோரே. |
உரை |