முற்றுகர குற்றுகர ஈறுகள்
 
195. அன் என் சாரியை ஏழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத்து' என்ப.
உரை
   
196. குற்றியலுகரத்து இறுதி முன்னர்,
முற்றத் தோன்றும், `இன்` என் சாரியை.
உரை
   
197. நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும்
அப் பால் மொழிகள் அல் வழியான.
உரை
   
198. அவைதாம்,
இயற்கைய ஆகும் செயற்கைய' என்ப.
உரை
   
199. எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். உரை
   
200. ஒன்று முதல் ஆக, பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் காலை,
ஆன் இடை வரினும் மானம் இல்லை;
அஃது என் கிளவி ஆவயின் கெடுமே;
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.
உரை
   
201. யாது' என் இறுதியும், சுட்டு முதல் ஆகிய
ஆய்த இறுதியும், அன்னொடு சிவணும்;
ஆய்தம் கெடுதல் ஆவயினான.
உரை
   
202. ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்,
சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்;
ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே.
உரை