தொடக்கம் | ||
அகர ஈறு
|
||
204. | அகர இறுதிப் பெயர்நிலை முன்னர், வேற்றுமை அல் வழி, க, ச, த, ப, தோன்றின், தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே. |
உரை |
205. | வினை எஞ்சு கிளவியும், உவமக் கிளவியும், `என' என் எச்சமும், சுட்டின் இறுதியும், `ஆங்க' என்னும் உரையசைக் கிளவியும், ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. |
உரை |
206. | சுட்டின் முன்னர் ஞ, ந, ம, தோன்றின், ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும். |
உரை |
207. | ய, வ, முன் வரினே, வகரம் ஒற்றும். | உரை |
208. | உயிர் முன் வரினும், ஆயியல் திரியாது. | உரை |
209. | நீட வருதல் செய்யுளுள் உரித்தே. | உரை |
210. | `சாவ' என்னும் `செய' என் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே. |
உரை |
211. | அன்ன' என்னும் உவமக் கிளவியும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும், `செய்ம்மன' என்னும் தொழில் இறு சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும், `செய்த' என்னும் பெயர் எஞ்சு கிளவியும், `செய்யிய' என்னும் வினை எஞ்சு கிளவியும், `அம்ம' என்னும் உரைப்பொருட் கிளவ. |
உரை |
212. | `வாழிய' என்னும் செய என் கிளவி இறுதி யகரம் கெடுதலும் உரித்தே. |
உரை |
213. | உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். | உரை |
214. | பலவற்று இறுதி நீடு மொழி உளவே- செய்யுள் கண்ணிய தொடர்மொழியான. |
உரை |
215. | தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின், லகரம் றகர-ஒற்று ஆதலும் உரித்தே. |
உரை |
216. | வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். | உரை |
217. | வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே | உரை |
218. | மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. | உரை |
219. | மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. | உரை |
220. | அத்து அவண் வரினும், வரை நிலை இன்றே. | உரை |
221. | பலவற்று இறுதி உருபு இயல் நிலையும். | உரை |