ஆகார ஈறு
 
222. ஆகார இறுதி அகர இயற்றே. உரை
   
223. செய்யா என்னும் வினை எஞ்சு கிளவியும்
அவ் இயல் திரியாது' என்மனார் புலவர்.
உரை
   
224. உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி
மெய்ம்மையாக அகரம் மிகுமே.
உரை
   
225. ஆவும், மாவும், விளிப்பெயர்க் கிளவியும்,
யா என் வினாவும், பலவற்று இறுதியும்,
ஏவல் குறித்த உரையசை மியாவும்,
தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு,-
அன்றி அனைத்தும் இயல்பு' என மொழிப.
உரை
   
226. வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. உரை
   
227. குறியதன் முன்னரும், ஓரெழுத்து மொழிக்கும்,
அறியத் தோன்றும், அகரக் கிளவி.
உரை
   
228. `இரா' என் கிளவிக்கு அகரம் இல்லை. உரை
   
229. நிலா' என் கிளவி அத்தொடு சிவணும். உரை
   
230. யா-மரக்கிளவியும், பிடாவும், தளாவும்,
ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே.
உரை
   
231. வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. உரை
   
232. மா-மரக்கிளவியும், ஆவும், மாவும்,
ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன;
அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா;
னகரம் ஒற்றும் ஆவும் மாவும்.
உரை
   
233. ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. உரை
   
234. ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்
தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே.
உரை
   
235. குறியதன் இறுதிச் சினை கெட, உகரம்
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே.
உரை