இகர ஈறு
 
236. இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்,
வேற்றுமைஆயின், வல்லெழுத்து மிகுமே.
உரை
   
237. இனி, அணி,' என்னும் காலையும் இடனும்,
வினை எஞ்சு கிளவியும், சுட்டும், அன்ன.
உரை
   
238. இன்றி' என்னும் வினை எஞ்சு இறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே.
உரை
   
239. சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. உரை
   
240. பதக்கு முன் வரினே தூணிக் கிளவி
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே.
உரை
   
241. உரி வரு காலை, நாழிக் கிளவி
இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே;
டகாரம் ஒற்றும் ஆவயினான.
உரை
   
242. பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு
அத்தும் இன்னும் சாரியை ஆகும்.
உரை
   
243. வளி என வரூஉம் பூதக் கிளவியும்
அவ் இயல் நிலையல் செவ்விது' என்ப.
உரை
   
244. உதி-மரக்கிளவி மெல்லெழுத்து மிகுமே. உரை
   
245. புளி-மரக்கிளவிக்கு அம்மே சாரியை. உரை
   
246. ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. உரை
   
247. வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை;
ஒல்வழி அறிதல், வழக்கத்தான!
உரை
   
248. நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆன் இடை வருதல் ஐயம் இன்றே.
உரை
   
249. திங்கள் முன் வரின் இக்கே சாரியை. உரை