ஈகார ஈறு
 
250. ஈகார இறுதி ஆகார இயற்றே. உரை
   
251. நீ' என் பெயரும், இடக்கர்ப் பெயரும்,
'மீ' என மரீஇய இடம் வரை கிளவியும்,
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.
உரை
   
252. இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்
உடன் நிலை மொழியும் உள' என மொழிப.
உரை
   
253. வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. உரை
   
254. நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்;
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.
உரை