| தொடக்கம் | ||
| உகர ஈறு
|
||
| 255. | உகர இறுதி அகர இயற்றே. | உரை |
| 256. | சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். | உரை |
| 257. | ஏனவை வரினே, மேல் நிலை இயல்பே. | உரை |
| 258. | சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. | உரை |
| 259. | அன்று வரு காலை, ஆ ஆகுதலும்; ஐ வரு காலை, மெய் வரைந்து கெடுதலும்; செய்யுள் மருங்கின் உரித்து' என மொழிப. |
உரை |
| 260. | வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. | உரை |
| 261. | எருவும் செருவும் அம்மொடு சிவணி, திரிபு இடன் உடைய, தெரியும் காலை; அம்மின் மகரம் செருவயின் கெடுமே; தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை. |
உரை |
| 262. | ழகர உகரம் நீடு இடன் உடைத்தே; உகரம் வருதல், ஆவயினான. |
உரை |
| 263. | ஒடு-மரக் கிளவி உதி-மர இயற்றே. | உரை |
| 264. | சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்; ஒற்று இடை மிகா, வல்லெழுத்து இயற்கை |
உரை |