ஐகார ஈறு
 
281. ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்,
வேற்றுமைஆயின், வல்லெழுத்து மிகுமே.
உரை
   
282. சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். உரை
   
283. விசை-மரக்கிளவியும், ஞெமையும், நமையும்,
ஆ முப் பெயரும் சே-மர இயல.
உரை
   
284. 'பனையும், அரையும், ஆவிரைக் கிளவியும்,
நினையும் காலை அம்மொடு சிவணும்;
ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே,
மெய் அவண் ஒழிய' என்மனார் புலவர்.
உரை
   
285. பனையின் முன்னர், அட்டு வரு காலை,
நிலை இன்று ஆகும், ஐ என் உயிரே;
ஆகாரம் வருதல் ஆவயினான.
உரை
   
286. கொடி முன் வரினே, ஐ அவண் நிற்ப,
கடி நிலை இன்றே, வல்லெழுத்து மிகுதி.
உரை
   
287. திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. உரை
   
288. 'மழை' என் கிளவி வளி இயல் நிலையும். உரை
   
289. 'செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐ என் இறுதி அவா முன் வரினே,
மெய்யொடும் கெடுதல்' என்மனார் புலவர்;
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்.
உரை