வடிவு
 
14. உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. உரை
   
15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். உரை
   
16. எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. உரை
   
17. புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்,
ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்,
ஆயீர் இயல-உயிர்த்தல் ஆறே.
உரை
   
18. மெய்யின் வழியது, உயிர் தோன்று நிலையே. உரை
   
19. `வல்லெழுத்து' என்ப - `க, ச, ட, த, ப, ற' உரை
   
20. `மெல்லெழுத்து' என்ப - `ங, ஞ, ண, ந, ம, ன' உரை
   
21. `இடையெழுத்து' என்ப - `ய, ர, ல, வ, ழ, ள' உரை