மெல்லொற்று ஈறுகள்
 
297. ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்,
அல்லது கிளப்பினும், வேற்றுமைக்கண்ணும்,
வல்லெழுத்து இயையின், அவ் எழுத்து மிகுமே;
உகரம் வருதல் ஆவயினான.
உரை
   
298. ஞ, ந, ம, வ, இயையினும் உகரம் நிலையும். உரை
   
299. நகர இறுதியும் அதன் ஓரற்றே. உரை
   
300. வேற்றுமைக்கு உ-க் கெட, அகரம் நிலையும். உரை
   
301. வெரிந்' என் இறுதி முழுதும் கெடுவழி,
வரும் இடன் உடைத்தே, மெல்லெழுத்து இயற.
உரை
   
302. ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. உரை
   
303. ணகார இறுதி வல்லெழுத்து இயையின்,
டகாரம் ஆகும், வேற்றுமைப் பொருட்கே
உரை
   
304. ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. உரை
   
305. ஆண்-மரக்கிளவி அரை-மர இயற்றே. உரை
   
306. விண்' என வரூஉம் காயப் பெயர்வயின்,
உண்மையும் உரித்தே, 'அத்து' என் சாரியை;
செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை.
உரை
   
307. தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. உரை
   
308. கிளைப் பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. உரை
   
309. வேற்றுமை அல்வழி, 'எண்' என் உணவுப் பெயர்
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே.
உரை
   
310. `முரண்' என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். உரை
   
311. மகர இறுதி வேற்றுமைஆயின்,
துவரக் கெட்டு, வல்லெழுத்து மிகுமே.
உரை
   
312. அகர ஆகாரம் வரூஉம் காலை,
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே.
உரை
   
313. மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே;
செல் வழி அறிதல் வழக்கத்தான.
உரை
   
314. இல்லம்-மரப்பெயர் விசை-மர இயற. உரை
   
315. அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். உரை
   
316. அகம்' என் கிளவிக்குக் 'கை' முன் வரினே,
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்,
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க;
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.
உரை
   
317. இலம்' என் கிளவிக்குப் படு வரு காலை,
நிலையலும் உரித்தே, செய்யுளான.
உரை
   
318. அத்தொடு சிவணும், ஆயிரத்து இறுதி-
ஒத்த எண்ணு முன் வரு காலை.
உரை
   
319. அடையொடு தோன்றினும், அதன் ஓரற்றே. உரை
   
320. அளவும் நிறையும் வேற்றுமை இயல. உரை
   
321. படர்க்கைப் பெயரும், முன்னிலைப் பெயரும்,
தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்,
வேற்றுமைஆயின், உருபு இயல் நிலையும்;
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.
உரை
   
322. அல்லது கிளப்பின், இயற்கை ஆகும். உரை
   
323. அல்லது கிளப்பினும், வேற்றுமைக்கண்ணும்,
'எல்லாம்' எனும் பெயர் உருபு இயல் நிலையும்;
வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது.
உரை
   
324. மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. உரை
   
325. உயர்திணைஆயின், உருபு இயல் நிலையும். உரை
   
326. `நும்' என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. உரை
   
327. அல்லதன் மருங்கின் சொல்லும் காலை,
உ-க் கெட நின்ற மெய்வயின் ஈ வர இ இடை நிலைஇ, ஈறு கெட, ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே;
அப் பால் மொழிவயின் இயற்கை ஆகும்.
உரை
   
328. தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. உரை
   
329. ஈமும், கம்மும், 'உரும்' என் கிளவியும்,
ஆ முப் பெயரும் அவற்று ஓரன.
உரை
   
330. வேற்றுமைஆயின், ஏனை இரண்டும்
தோற்றம் வேண்டும், 'அக்கு' என் சாரியை.
உரை
   
331. வகாரம் மிசையும் மகாரம் குறுகும். உரை
   
332. நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன;
அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே;
ஒற்று மெய் கெடுதல்' என்மனார் புலவர்.
உரை
   
333. னகார இறுதி வல்லெழுத்து இயையின்,
றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
உரை
   
334. மன்னும், சின்னும், ஆனும், ஈனும்,
பின்னும், முன்னும், வினை எஞ்சு கிளவியும்,
அன்ன இயல' என்மனார் புலவர்.
உரை
   
335. சுட்டு முதல் வயினும், எகரம் முதல் வயினும்,
அப் பண்பு நிலையும் இயற்கைய' என்ப.
உரை
   
336. குயின்' என் கிளவி இயற்கை ஆகும். உரை
   
337. எகின்-மரம் ஆயின் ஆண்-மர இயற்றே. உரை
   
338. ஏனை எகினே அகரம் வருமே;
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும்.
உரை
   
339. கிளைப் பெயர் எல்லாம் கிளைப் பெயர் இயல. உரை
   
340. மீன்' என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. உரை
   
341. `தேன்' என் கிளவி வல்லெழுத்து இயையின்,
மேல் நிலை ஒத்தலும், வல்லெழுத்து மிகுதலும்,
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே;
வல்லெழுத்து மிகு வழி, இறுதி இல்லை.
உரை
   
342. மெல்லெழுத்து மிகினும், மானம் இல்லை. உரை
   
343. மெல்லெழுத்து இயையின், இறுதியொடு உறழும். உரை
   
344. இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். உரை
   
345. ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. உரை
   
346. மின்னும், பின்னும், பன்னும், கன்னும்,
அந் நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல.
உரை
   
347. வேற்றுமைஆயின், ஏனை எகினொடு
தோற்றம் ஒக்கும், 'கன்' என் கிளவி.
உரை
   
348. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்,
முதற்கண் மெய் கெட அகரம் நிலையும்;
மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே.
உரை
   
349. ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே.
உரை
   
350. சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும். உரை
   
351. அப் பெயர் மெய் ஒழித்து, அன் கெடு வழியே,
நிற்றலும் உரித்தே, 'அம்' என் சாரியை;
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான.
உரை
   
352. தானும், பேனும், கோனும், என்னும்
ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே.
உரை
   
353. 'தான், யான்' எனும் பெயர் உருபு இயல் நிலையும். உரை
   
354. வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும்
தோற்றம் இல்லை' என்மனார் புலவர்.
உரை
   
355. அழன்' என் இறுதி கெட, வல்லெழுத்து மிகுமே. உரை
   
356. முன்' என் கிளவி முன்னர்த் தோன்றும்
'இல்' என் கிளவிமிசை றகரம் ஒற்றல்
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே.
உரை
   
357. பொன்' என் கிளவி ஈறு கெட, முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்-
செய்யுள் மருங்கின் தொடர் இயலான.
உரை