இடையொற்று ஈறுகள்
 
358. யகர இறுதி, வேற்றுமைப் பொருள்வயின்,
வல்லெழுத்து இயையின், அவ் எழுத்து மிகுமே.
உரை
   
359. தாய்' என் கிளவி இயற்கை ஆகும். உரை
   
360. மகனை வினை கிளப்பின், முதல் நிலை இயற்றே. உரை
   
361. மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே. உரை
   
362. அல்வழி எல்லாம் இயல்பு' என மொழிப. உரை
   
363. ரகார இறுதி யகார இயற்றே. உரை
   
364. ஆரும், வெதிரும், சாரும், பீரும்,
மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும்.
உரை
   
365. 'சார்' என் கிளவி காழ்வயின் வலிக்கும். உரை
   
366. 'பீர்' என் கிளவி அம்மொடும் சிவணும். உரை
   
367. லகார இறுதி னகார இயற்றே. உரை
   
368. மெல்லெழுத்து இயையின், னகாரம் ஆகும். உரை
   
369. 'அல்வழி எல்லாம் உறழ்' என மொழிப. உரை
   
370. 'தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகர் இன்று' என்மனார் புலமையோரே.
உரை
   
371. நெடியதன் இறுதி இயல்புமார் உளவே. உரை
   
372. நெல்லும், செல்லும், கொல்லும், சொல்லும்,
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல
உரை
   
373. 'இல்' என் கிளவி இன்மை செப்பின்,
வல்லெழுத்து மிகுதலும், ஐ இடை வருதலும்,
இயற்கை ஆதலும், ஆகாரம் வருதலும்,
கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே.
உரை
   
374. 'வல்' என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. உரை
   
375. நாயும் பலகையும் வரூஉம் காலை,
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே;
உகரம் கெடு வழி அகரம் நிலையும்.
உரை
   
376. 'பூல், வேல்,' என்றா, 'ஆல்' என் கிளவியொடு
ஆ முப் பெயர்க்கும் அம் இடை வருமே.
உரை
   
377. தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. உரை
   
378. 'வெயில்' என் கிளவி மழை இயல் நிலையும். உரை
   
379. சுட்டு முதல் ஆகிய வகர இறுதி
முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும்
உரை
   
380. வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும். உரை
   
381. மெல்லெழுத்து இயையின், அவ் எழுத்து ஆகும் உரை
   
382. ஏனவை புணரின், இயல்பு' என மொழிப உரை
   
383. ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே உரை
   
384. ழகார இறுதி ரகார இயற்றே உரை
   
385. தாழ்' என் கிளவி கோலொடு புணரின்,
அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும்.
உரை
   
386. தமிழ்' என் கிளவியும் அதன் ஓரற்றே உரை
   
387. 'குமிழ்' என் கிளவி மரப்பெயர் ஆயின்,
'பீர்' என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும்
உரை
   
388. 'பாழ்' என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே உரை
   
389. 'ஏழ்' என் கிளவி உருபு இயல் நிலையும் உரை
   
390. அளவும் நிறையும் எண்ணும் வரு வழி,
நெடுமுதல் குறுகலும், உகரம் வருதலும்,
கடி நிலை இன்றே ஆசிரியர்க்க.
உரை
   
391. 'பத்து' என் கிளவி ஒற்று இடை கெடு வழி,
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி
உரை
   
392. ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே உரை
   
393. நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே
உரை
   
394. 'ஐ, அம், பல்' என வரூஉம் இறுதி
அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்
உரை
   
395. உயிர் முன் வரினும், ஆயியல் திரியாது உரை
   
396. 'கீழ்' என் கிளவி உறழத் தோன்றும் உரை
   
397. ளகார இறுதி ணகார இயற்றே உரை
   
398. மெல்லெழுத்து இயையின், ணகாரம் ஆகும் உரை
   
399. 'அல்வழி எல்லாம் உறழ்' என மொழிப உரை
   
400. ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே,
தகரம் வரூஉம் காலையான.
உரை
   
401. நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்,
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும்,
போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே
உரை
   
402. தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல உரை
   
403. 'இருள்' என் கிளவி வெயில் இயல் நிலையும் உரை
   
404. புள்ளும் வள்ளுற் தொழில்பெயர் இயல உரை
   
405. 'மக்கள்' என்னும் பெயர்ச்சொல் இறுதி
தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே
உரை