தொடக்கம் | ||
குற்றுகரப் பொதுப் புணர்ச்சி
|
||
412. | ஈர்-எழுத்து மொழியும், உயிர்த்தொடர் மொழியும், வேற்றுமைஆயின், ஒற்று இடை இனம் மிக, தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி |
உரை |
413. | ஒற்று இடை இனம் மிகா மொழியுமார் உளவே; அத் திறத்து இல்லை, வல்லெழுத்து மிகலே |
உரை |
414. | 'இடையொற்றுத் தொடரும், ஆய்தத் தொடரும், நடை ஆயியல' என்மனார் புலவர் |
உரை |
415. | வன்றொடர் மொழியும், மென்றொடர் மொழியும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே; மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் வல்லொற்று இறுதி, கிளை ஒற்று, ஆகும் |
உரை |
416. | மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை | உரை |
417. | மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே | உரை |
418. | ஈர்-எழுத்து மொழியும், வல்லொற்றுத் தொடரும், அம் இடை வரற்கும் உரியவை உளவே- அம் மரபு ஒழுகும் மொழிவயினான |
உரை |
419. | 'ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம் அக் கிளைமொழியும் உள' என மொழிப |
உரை |
420. | எண்ணுப்பெயர்க் கிளவி உருபு இயல் நிலையும். | உரை |