குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி
 
421. வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் உரை
   
422. 'பெண்டு' என் கிளவிக்கு அன்னும் வரையார் உரை
   
423. யாது' என் இறுதியும், சுட்டு முதல் ஆகிய
ஆய்த இறுதியும், உருபு இயல் நிலையும்
உரை
   
424. முன் உயிர் வரும் இடத்து, ஆய்தப் புள்ளி
மன்னல் வேண்டும், அல்வழியான
உரை
   
425. ஏனை முன் வரினே, தான் நிலை இன்றே உரை
   
426. அல்லது கிளப்பின், எல்லா மொழியும்
சொல்லிய பண்பின் இயற்கை ஆகும்
உரை
   
427. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே உரை
   
428. சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும்,
யா வினா முதலிய மென்றொடர் மொழியும்,
ஆயியல் திரியா, வல்லெழுத்து இயற்கை
உரை
   
429. யா வினா மொழியே இயல்பும் ஆகும் உரை
   
430. அந் நால் மொழியும் தம் நிலை திரியா. உரை
   
431. 'உண்டு' என் கிளவி உண்மை செப்பின்,
முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும்,
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்,
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே-
வல்லெழுத்து வரூஉம் காலையான
உரை
   
432. இரு திசை புணரின் ஏ இடை வருமே உரை
   
433. 'திரிபு வேறு கிளப்பின், ஒற்றும் உகரமும்
கெடுதல் வேண்டும்' என்மனார் புலவர்,
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும்,
தெற்கொடு புணரும் காலையான
உரை