அதிகாரப் புறனடை
 
481. 'ல, ன' என வரூஉம் புள்ளி இறுதி முன்,
உம்மும் கெழுவும் உளப்படப் பிறவும்,
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி,
செய்யுள்-தொடர்வயின் மெய் பெற நிலையும்-
வேற்றுமை குறித்த பொருள்வயினான
உரை
   
482. உயிரும் புள்ளியும் இறுதி ஆகி,
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி,
நெறிப் பட வாராக் குறைச்சொற் கிளவியும்,
உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும்,
'செய்யும், செய்த' என்னும் கிளவியின்
மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும்,
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம்
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்,
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய;
புணர் இயல் நிலையிடை உணரத் தோன்றா
உரை
   
483. கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்,
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும்,
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்,
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்,
நன் மதி நாட்டத்து!' என்மனார் புலவர்.
உரை