தொடக்கம் | ||
பால்
|
||
2. | ஆடூஉ அறி சொல், மகடூஉ அறி சொல், பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி, அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே . |
உரை |
3. | ஒன்று அறி சொல்லே, பல அறி சொல், என்று ஆயிரு பாற் சொல் அஃறிணையவ்வே . |
உரை |
4. | பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும், தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும், 'இவ்' என அறியும் அந்தம் தமக்கு இலவே; உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும் . |
உரை |
5. | னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல் . | உரை |
6. | ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் . | உரை |
7. | ரஃகான் ஒற்றும், பகர இறுதியும், மாரைக் கிளவி உளப்பட, மூன்றும் நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே . |
உரை |