எண் ஒருமைக்குரிய சொற்கள்
 
44. ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்
ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது.
உரை
   
45. வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார் . உரை
   
46. வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார் . உரை
   
47. எண்ணுங்காலும் அது அதன் மரபே . உரை
   
48. இரட்டைக் கிளவி இரட்டின் பிரிந்து இசையா . உரை
   
49. ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்
தெரிபு வேறு கிளத்தல், தலைமையும் பன்மையும்!
உயர்திணை மருங்கினும், அஃறிணை மருங்கினும்.
உரை
   
50. பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா, வழக்கு வழிப்பட்டன.
உரை
   
51. பலவயினானும் எண்ணுத் திணை விரவுப் பெயர்
அஃறிணை முடிபின, செய்யுளுள்ளே.
உரை
   
52. வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்,
வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல், என்று
ஆயிரு வகைய-பல பொருள் ஒரு சொல்.
உரை
   
53. அவற்றுள்,
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்-
வேறுபடு வினையினும், இனத்தினும், சார்பினும்,
தேறத் தோன்றும்-பொருள் தெரி நிலையே.
உரை
   
54. ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்,
நினையும் காலை, கிளந்தாங்கு இயலும்.
உரை
   
55. குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி . உரை