புறனடை
 
56. குடிமை, ஆண்மை, இளமை, மூப்பே,
அடிமை, வன்மை, விருந்தே, குழுவே,
பெண்மை, அரசே, மகவே, குழவி,
தன்மை திரி பெயர், உறுப்பின் கிளவி,
காதல், சிறப்பே, செறற்சொல், விறற்சொல்-என்று
ஆவறு-மூன்றும் உளப்படத் தொகைஇ,
அன்ன பிறவும், அவற்றொடு சிவணி,
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையினஆயினும்,
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.
உரை
   
57. காலம், உலகம், உயிரே, உடம்பே,
பால் வரை தெய்வம், வினையே, பூதம்,
ஞாயிறு, திங்கள், சொல், என வரூஉம்
ஆயீர்-ஐந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்,
பால் பிரிந்து இசையா, உயர்திணை மேன.
உரை
   
58. நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே . உரை
   
59. இசைத்தலும் உரிய, வேறிடத்தான . உரை
   
60. எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே . உரை
   
61. கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பாடு இலவே-
தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே.
உரை