தொடக்கம் | ||
முதல் வேற்றுமை
|
||
65. | அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. |
உரை |
66. | பொருண்மை சுட்டல், வியங்கொள வருதல், வினை நிலை உரைத்தல், வினாவிற்கு ஏற்றல், பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல், என்று அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே . |
உரை |
67. | பெயரின் ஆகிய தொகையுமார் உளவே; அவ்வும் உரிய, அப்பாலான. |
உரை |
68. | எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ் இயல் நிலையல் செவ்விது' என்ப. |
உரை |
69. | கூறிய முறையின் உருபு நிலை திரியாது, ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய' என்ப. |
உரை |
70. | பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா, தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே. |
உரை |