தொடக்கம் | ||
இரண்டாம் வேற்றுமை
|
||
71. | இரண்டாகுவதே, 'ஐ' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி; எவ் வழி வரினும், வினையே, வினைக்குறிப்பு, அவ் இரு முதலின் தோன்றும், அதுவே . |
உரை |
72. | காப்பின், ஒப்பின், ஊர்தியின், இழையின், ஓப்பின், புகழின், பழியின், என்றா- பெறலின், இழவின், காதலின், வெகுளியின், செறலின், உவத்தலின், கற்பின், என்றா- அறுத்தலின், குறைத்தலின், தொகுத்தலின், பிரித்தலின், நிறுத்தலின், அளவின், எண்ணின், என்றா- ஆக்கலின், சார்தலின், செலவின், கன்றலின், நோக்கலின், அஞ்சலின், சிதைப்பின், என்றா- அன்ன பிறவும் அம் முதற் பொருள என்ன கிளவியும் அதன் பால' என்மனார் . |
உரை |