மூன்றாம் வேற்றுமை
 
73. மூன்றாகுவதே,
'ஒடு' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
வினைமுதல், கருவி, அனை முதற்று-அதுவே .
உரை
   
74. அதனின் இயறல், அதன்-தகு கிளவி,
அதன் வினைப்படுதல், அதனின் ஆதல்,
அதனின் கோடல், அதனொடு மயங்கல், அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி,
அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி,
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை,
இன் ஆன் ஏது, ஈங்கு, என வரூஉம
அன்ன பிறவும் அதன் பால' என்மனார் .
உரை