தொடக்கம் | ||
சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு
|
||
34. | குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்- `யா' என் சினைமிசை, உரையசைக் கிளவிக்கு, ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. |
உரை |
35. | புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே; உணரக் கூறின், முன்னர்த் தோன்றும். |
உரை |
36. | நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. |
உரை |
37. | இடைப்படின், குறுகும் இடனுமார் உண்டே- கடப்பாடு அறிந்த புணரியலான. |
உரை |
38. | குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி, உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. |
உரை |
39. | ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். | உரை |
40. | உருவினும் இசையினும் அருகித் தோன்றும் மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா- ஆய்தம் அஃகாக் காலையான. |
உரை |